tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

புதுடெல்லி, டிச. 12–

 மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக சட்டசபையில் அரசினர் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தை மக்களவையில் தமிழக எம்பிக்கள் நேற்று எழுப்பினர்.

கனிமொழி

இதுகுறித்து பூஜ்ய நேரத்தில், திமுக உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை, தமிழகம் கடுமையாகக எதிர்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால், சுற்றுச்சூழல், கலாச்சார, சமூக, பாரம்பர்ய சின்னங்களுக்கு ஆபத்து ஏற்படும். சுரங்க அனுமதி வழங்கியதில், மாநில அரசிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்கவில்லை. 

இந்த திட்டத்தை தமிழகத்தில் பல கட்சிகளும் எதிர்க்கின்றன. அதனால்தான், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதனால், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 

இவ்வாறு கனிமொழி பேசினார். 

திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது; சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று மத்திய அரசால் வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். 

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், ‘‘டங்ஸ்டன் சுரங்கத்தை பொறுத்தமட்டில் மதுரை மாவட்டத்தில், அழகர் கோவில் மற்றும் அரிட்டாப்பட்டிக்கு நடுவில் அமைவதற்காக மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அழகர் கோயில் போன்ற இறை நம்பிக்கை உள்ள இடங்களையும், முருகனின் அறுபடை வீடுகளையும் அழிக்க பாஜ துடிப்பது ஏன்? அதுவும், இந்த சுரங்க திட்டத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப் போவது பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

ராசி பலன்

கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.... மேலும் படிக்க

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம்... மேலும் படிக்க


மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ்... மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் காணப்படும். காப்பீடு தொடர்பான புரிதல்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. திடீர் தன வரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள்... மேலும் படிக்க

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில்... மேலும் படிக்க

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள்... மேலும் படிக்க

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.... மேலும் படிக்க

பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புது... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை... மேலும் படிக்க

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள்... மேலும் படிக்க