tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

புதுடெல்லி, டிச. 12-

காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி பரபரப்பை கிளப்பினார். அடிக்கடி சலுான் கடைக்காரர், காலணி தயாரிப்பவர், இனிப்பு தின்பண்டங்கள் விற்பவர், லாரி டிரைவர்கள், விவசாய கூலிகள் என பல தரப்பினரை சந்தித்து அடிக்கடி உரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்தவரிசையில், இப்போது டெல்லியில் ஒரு மளிகைக்கடைக்காரரை சந்தித்து உரையாடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘சமீபத்தில் நான் டெல்லியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றேன். மளிகைக் கடைகள், பொருட்களை விற்கும் ஊடகம் மட்டுமல்ல. அவர்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சி மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால், வேகமான வர்த்தகத்தின் விரைவான வளர்ச்சியால், ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலைக்குரிய விஷயம்’’என்றார். 

அப்போது, ராகுலிடம் அந்த கடை உறுப்பினர் ஒருவர், "குறைந்த விலையில் அதிக பொருட்களை விற்பவர்கள் எங்கள் லாபத்தின் விளிம்பு நிலையை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஏகபோகத்தை உருவாக்குகிறார்கள்"என்று கூறினார். 

ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்து ராகுலிடம் கடை உரிமையாளர் அதிருப்தி தெரிவித்தார். வாட் வரியை விட 4 மடங்கு கூடுதலாக வரி செலுத்துவதாகவும் அவர் கூறினார். பின்னர் ராகுல் கூறுகையில், தொழில் நுட்பத்தையும், புதிய கண்டுபிடிப்பையும் ஊக்குவிக்க ஒரு முறையை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ஏகபோக முதலாளிகளால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும். எனவே, இந்த 2க்குமான சமநிலையை கண்டுபிடிப்பது அவசியம் என்றார்.

ராசி பலன்

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ப... மேலும் படிக்க

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி சார்ந்த பணிகளில் அறிமுகம்... மேலும் படிக்க

நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய... மேலும் படிக்க

உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள்... மேலும் படிக்க

முக்கியமான முடிவுகளில் ஆலோசனை பெறவும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகளில் இருந்துவந்த தடைகள் மறையும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். கணவன்,... மேலும் படிக்க

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.  உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.... மேலும் படிக்க

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும்... மேலும் படிக்க