tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் ஊர் உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு கரைகளை ஒட்டி அமைந்துள்ளது உத்திரமேரூர்

 

 

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், தமிழகத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களில், மிகப் பெரியது. இந்த ஒன்றியத்தில், 73 கிராம ஊராட்சிகளும், 368 குக்கிராமங்களும் உள்ளன.ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள சாலவாக்கம் பகுதியைச் சுற்றி, 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.அவற்றில் பினாயூர், பழவேரி, திருமுக்கூடல் போன்ற ஊராட்சிகள் வாலாஜாபாத் அருகிலும், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் போன்ற ஊராட்சிகள் செங்கல்பட்டு அருகிலும் அமைந்துள்ளன.

 

 

போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது. 

 

உத்திரமேரூருக்கு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் முதலிய பகுதிகளிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பல்வேறு கோயில்களையும், சுற்றுலாத் தளங்களையும் கொண்டது. இதன் அருகிலேயே விழுப்புரம் மாவட்டத்திலும் காண்பதற்கு பல இடங்கள் உள்ளன. 

 

4.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 149 தெருக்களையும்

கொண்ட எங்கள் பேரூராட்சி உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

எங்கள் உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயில், சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், சம்பவராயர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் போன்றோரால் திருப்பணிகள் செய்யபட்டது.இந்த சுந்தரராஜ வரதனைப் பிரும்மா, ருத்ரன், பூதேவி, மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது தல புராண வரலாறு கூறும் செய்தியாகும்.இக் கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்தில் சுந்தர வரதராஜர் உள்ளார். இவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார். இவரைத் தவிர, இந்த அடித்தளத்திலேயே அச்சுத வரதன், அநிருத்தவரதன், கல்யாணவரதன், ஆனந்தவல்லித்தாயார், ஆண்டாள் முதலியோர் உள்ளனர்.அடுத்த தளத்தில் இருப்பவர் வைகுண்ட வரதர். அவருடன் கிருஷ்ணார்ச்சுனர், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகன் ஆகியோர் இருக்கிறார்கள். மூன்றாவது தளத்தில் ரங்கநாதவரதர் பள்ளிகொண்டுள்ளார். இக்கோயில் இப்படி மூன்று தளங்களாகக் கட்டப் பட்டிருந்தாலும், அவைகளில் வீற்றிருக்கும் ஸ்திர பேதங்கள் நேருக்கு நேராக ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப் படவில்லை, இப்படி விமான அமைப்பும் மூர்த்திகளின் அமைப்பும் கொண்ட கோயில் தமிழ் நாட்டில் அதிகம் இல்லை எனப்படுகிறது. மேலும் எங்கள் உத்திரமேரூரில் கேதாரீஸ்வரர் திருக்கோவில், செங்கையம்மன் திருக்கோயில் போன்ற கோவில்கள் உள்ளன. 

 

உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம்,பாண்டவவனம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், உத்திரமேலூர், பஞ்சவரத ஷேத்திரம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்றும் அழைக்கப்பட்டுள்ளன 

 

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 73 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உத்திரமேரூரில் இயங்குகிறது.விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாய கூலி வேலை, கட்டுமான தொழிலாளிகள் அதிகம் உள்ளனர்.

உத்தரமேரூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய கிராமம் ஆகும் உத்திரமேரூரில் நான்கு பல்லவ மன்னர்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சோழர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907–950), முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985–1014), முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1012–1044) மற்றும் குலோத்துங்க சோழன் I (1070–1120) காலத்திய கல்வெட்டுகள் கோவில்களுக்கு வழங்கிய பல்வேறு கொடைகளைப் பதிவு செய்துள்ளன

 

 

பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் இக் கல்வெட்டுக்களில் உள்ளது. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்,10ஆம் நூற்றாண்டு கால தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

 

 

இந்த ஊரில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் மக்களாட்சி முறையும், தேர்தல் முறையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி மாண்பு காத்த தமிழர்களும், இந்த ஊரின் சிறப்பும் உலகறியச் செய்யப்படவேண்டியதாகும். 

உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது.உத்திரமேரூரில் அந்த காலத்திலேயே ஊராட்சி முறை இருந்துள்ளது.ஏமாற்றுப் பேர்வழிகள், அறம் தவறியவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற விதிமுறையும் இருந்துள்ளது.கோவில்கள் கிராமங்களின் அதிகார மையங்களாக செயல்பட்டதால், கோவிலோடு இணைந்திருந்த மகாசபைகள் உள்ளாட்சி நிர்வாக மையங்களாக மாற்றம் கண்டன..சோழர்களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது, 

 

உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியில், ராஜீவ்காந்தி நகர், இந்திரா நகர், குரும்பரை, நெல்லிமேடு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. 

 

இந்த கிராமத்தில் 5,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக குடிநீர் சேமிக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

 

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசூர் கிராமத்தில் 600 மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாலாறு மற்றும் பொது கிணற்று குடிநீர் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

 

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியானது நிரம்பி 1.70 மில்லியன் கன மீட்டர் முழு கொள்ளளவை எட்டினால் அந்த பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

-முத்துகிருஷ்ணகுமார் தஞ்சாவூர்

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க