tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மும்பை, டிச. 5
 மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதற்காக கவர்னர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து உரிமை கோரினார்  தேவேந்திர பட்னாவிஸ்.  இன்றுஅவர் பதவி ஏற்கிறார்.
    மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்ற போதிலும் யார் முதல்வர் என்பதில் இழுபறி நீடித்தது. ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார். ஆனால் அதை பாஜ தலைமை ஏற்கவில்லை. அதன்பின்னர் துணை முதல்வர் பதவி தருவதாகவும் சில முக்கிய இலாகா தரப்படும் என்றும் பா.ஜ.தலைமை உறுதிஅளித்தது. ஆனால் ஷிண்டே  தரப்பில் உள்துறை,நகர்ப்புற வளர்ச்சி, சபாநாயகர் போன்ற பதவிகளை கேட்டது. பின்னர் அதில் உடன்பாடு ஏற்பட்டது.
    இதையடுத்து   நேற்று நடந்த கூட்டத்தில்   பாஜ சட்டசபை குழுவின் தலைவராகவும் மகாயுதி கூட்டணியின் தலைவராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று  மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவி ஏற்கிறார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
    கவர்னருடன் சந்திப்பு
இதனையடுத்து கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்றுமாலை 5.30மணிக்குபதவி ஏற்கிறார்.  துணை முதல்வராக அஜித்பவார் பதவி ஏற்கிறார்.ஆனால் ஷிண்டே துணை முதல்வர் பதவி ஏற்க மறுத்து வருவதாக தெரிகிறது.அவரை பதவி ஏற்க வரும்படி பட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இன்றுமுடிவை தெரிவிப்பதாக  ஷிண்டே சஸ்பெண்ஸ் வைத்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க