tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் உசிலம்பட்டியானது மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். உசிலம்பட்டி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஆனையூர் ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட சட்டமன்ற தொகுதி ஆகும். இந்நகரமானது நான்கு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.உசிலை (அரப்பு) மரம் அதிகமாக இருந்ததால் உசிலம்பட்டி ஆயிற்று என செவி வழிச்செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இருந்தபோது உசிலம்பட்டி பகுதி தொன்மையான பகுதியாக விளங்கி உள்ளது. இங்கு சமணர்கள் படுகை உள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, உலைப்பட்டி பகுதிகளில் பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. 

உசிலம்பட்டி தொகுதியை பொருத்தவரை 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.இந்த தொகுதியில் செல்லம்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி நகராட்சிகளும், எழுமலை உள்ளிட்ட பல பேரூராட்சிகளும் இடம் பெற்றுள்ளன
உசிலம்பட்டி பகுதியில் பிரதான தொழில் விவசாயம்தான். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தொகுதியில் பிஸ்கட், மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக அளவில் இருந்தன. ஆனால் விலைவாசி உயர்வு, பன்னாட்டு கம்பெனிகளில் தாக்கம் போன்றவற்றால் இந்த தொழில்கள் நலிவடைந்து தற்போது ஒருசில கம்பெனிகளே உள்ளன. .


விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்டத்தை இணைக்கும் பகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் செல்ல உசிலம்பட்டி பஸ் நிலையத்தைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

மதுரை என்றால் மல்லிகை. இந்த மல்லிகை உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி பகுதிகளில்தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. 

உசிலம்பட்டிக்கு நடுவே ஒன்றரை ஏக்கரில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டிற்குள் தற்போது 10 பிளாட்பாரங்கள், 106 கடைகள் உள்ளன. சுற்றியுள்ள 200 கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்து இங்கிருந்து தான் .


உசிலம்பட்டி பகுதி மதுரை மாவட்டத்தில் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டியும் பல இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது மதுரை தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 33 கண்மாய்களும் 110 கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் உயர்வதுடன் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். அண்மையில் உசிலம்பட்டி 58 கால்வாயின் கடை மடை கண்மாய்க்கு வைகை நீர் கொண்டு செல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக விவசாயிகள், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.


கண்மாய் கரையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

எங்கள் உசிலம்பட்டி புத்தூர் பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது.மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். இக்கோயிலில் தாணுமாலய லிங்கம் இருக்கிறது. ஆவுடையார் இல்லாமல் பாணம் மட்டுமே இருக்கும் இந்த லிங்கத்திற்குள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவருமே ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம். மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, 

காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். 

இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். முதலில் இவர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். அப்போது சுவாமியின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலை பிரதிஷ்டை செய்தனர். தைப்பூசத்தன்று இவருக்கு விசேஷ மகாபிஷேகம் நடக்கும். "அகத்திய லிங்கம்' என்றும் இதற்கு பெயருண்டு.கோயில் வளாகத்திலுள்ள இலுப்பை மரத்தின்கீழ், காவல் தெய்வம் முனீஸ்வரன் அரூபமாக அருளுகிறார். 

உசிலம்பட்டி அருகே பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருமாணிக்கம் கிராமத்தில் அமைந்திருக்கிறது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். 
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலைப் போன்று கட்டமைப்பு கொண்ட இந்த திருக்கோயிலில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி தினங்களில் வேண்டும் பக்தர்களுக்கு அவர் நினைத்ததை நிறைவேற்றும் அம்மனாக விளங்கும் திருத்தலமாக இந்த தலம் விளக்குகிறது 

நாக தோஷங்கள் உள்ளோர்கள் இந்த தலத்திற்கு வந்து வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்றும் திருமணத்தடை நீங்கும் என்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நவராத்திரி தினங்கள் மாத பிரதோஷ தினங்கள், மார்கழி திருவாதிரை தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் ஊர்வலங்களும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 

உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையான வழிபாடான சப்தமாதர் வழிபாடு தொன்று இன்றளவும் இருந்து வருகிறது. முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பங்கள் பொதுவாக குடைவரை கோயிலில் உள்ள பாறையில் புடைப்பு சிற்பமாகவே இருக்கும். 

இவற்றை திருப்பரங்குன்றம், குன்னத்தூர், திருக்காளக்குடி, திருக்கோகர்ணம் போன்ற பாண்டியர் கால குடைவரை கோயில்களில் காணலாம். ஆனால் அல்லிகுண்டம் கிராமத்தில் பெரிய கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பது முக்கியமானதாக உள்ளது. 

உசிலம்பட்டி அருகே குறுவாளால் புலியின் வயிற்றில் வீரன் குத்தி கிழிப்பதும், அதே நேரத்தில் புலி தன் வாயால் வீரனின் தலையில் கடித்த படி உள்ள சிற்பத்துடன் கூடிய 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் கண்டறியப்பட்டது.
இந்த நடுகல் 7 அடி உயரம் 2 அடி அகலம், மூன்று பக்கங்களில் அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு அடுக்கு என 4 அடுக்குகளிலும், பக்கவாட்டில் உள்ள இரு புறமும் 5 அடுக்குகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

உசிலம்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. 

உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் சங்ககால கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழி போன்றவை சர்வசாதாரணமாக தென்படுகிறது. எழுமலை பகுதியில் உலைப்பட்டி, பாறைப்பட்டி பகுதியில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழி, பாறைகளில் கப்மார்க்குகள், உசிலம்பட்டி பகுதியில் புத்துார் ஆண்டிப்பொடவு, செட்டியபட்டி, வகுரணி புலிப்பாறைபொடவு, மலைப்பகுதிகளில் பாறை ஓவியங்கள் என கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க