tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, டிச.5
 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் வாயிலில் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த சிரோமணி அகாலி தள் தலைவரான முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது ‘காலிஸ்தான்’ தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 
     பஞ்சாப் மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக சிரோமணி அகாலிதளம் இருந்து வந்தது. இதன்தலைவர் பிரகாஷ்சிங் பாதலின் மகன் சுக்பீர்சிங்  பாதல். பஞ்சாபில்  துணை முதல்வராக இருந்தவர்.
 அகாலி தளம் ஆட்சியில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சீக்கிய மதத்தை அவமதித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் குர்மீத் ராம் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்கியது அகாலிதளம் ஆட்சி. ஆனால் குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை தராதது ஏன் என்பது தொடர்பாக சீக்கிய மதத்தின் உயர்நிலை அமைப்பான அகால் தத் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அகாலி தள் தலைவர்களான பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பலரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. சீக்கிய மதத்தில் தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலில் பாத்திரங்கள் கழுவுதல், காலணிகளை துடைத்தல், காவல் காத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும். இதில் பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதால் அவரது மகன் சுக்பீர் சிங் பாதலுக்கு பொற்கோவிலில் காவலராக பணிபுரிய வேண்டும்; பாத்திரங்களை கழுவ வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு
 இதனை ஏற்று பொற்கோவிலுக்கு சென்ற சுக்பீர் சிங் பாதல் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டார். சுக்பீர் சிங் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் சக்கர நாற்காலியில் அமர்ந்து காவல் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது அவரது ஆதரவாளர்களும் உடனிருந்தனர். 
இந்த நிலையில் நேற்று காலை பஞ்சாப் பொற்கோவில் வாயிலில் சுக்பீர் சிங் பாதல், சக்கர நாற்காலியில் ஈட்டியுடன் அமர்ந்த படி காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீக்கியர் ஒருவர் பொற்கோவிலுக்குள் நுழைவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக தாம் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதலை நோக்கி சுடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் துப்பாக்க்சி சூடு நடத்திய நபரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தால் பொற்கோவில் வளாகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
கிரிமினல்
இந்தச் சம்பவம் குறித்து விவரித்த அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர், “துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நரைன் சிங் சவுரா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு முன்னாள் பயங்கரவாதி மற்றும் கிரிமினல். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக விசாரணை நடத்துவோம். எதையும் விட்டுவிட மாட்டோம்“ என்றார்.
 இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு கோருகிற பப்பர் கல்சா என்ற பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க