tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, டிச.4
தமிழகத்தை காக்கும் கடவுளாக முதல்வர் செயல் படுகிறார்.ஆனால் சென்னைக்கும்,சேலத்துக்கும் அரசியல் செய்பவராக  பழனிசாமி செயல்படு கிறார் என்று அமைச்சர்  சேகர்பாபு கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பி.கே சேகர்பாபு செய்தியாளர்களிடம்கூறியதாவது: 
ஐம்பது  ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் 6 நாட்கள் போக்கு காட்டி கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையம் தனியார் அமைப்பு கருத்துகளை உள்வாங்கி தமிழ்நாடு முதல்வர்  இதுவரை இல்லாத அளவிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்.
காக்கும் கடவுள்
முதலமைச்சர் நடவடிக்கை தான் காரணம்
சென்னையில் 13 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே ஸ்தம்பித்தது. ஆனால் இம்முறை சில மணி நேரங்களில் வடிந்தது என்றால் முதல்வர் நடவடிக்கைகள் தான் காரணமாகும். இப்புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட திருவண்ணாமலை எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, விழுப்புரம் சிவசங்கர், பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு முத்துச்சாமி, ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளனர். முதல்வர் ஆய்வு செல்லும் போது பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்தார். துணை முதல்வரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களத்தில் நின்று போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்.
தமிழகத்தை காக்கும் கடவுள்
2000 கோடி நிவாரணம் ஒன்றிய அரசு வழங்க வேண்டுமென்றார். தமிழகத்தை காக்கும் கடவுளாக இருக்கிறார் முதல்வர்.      சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார். அவர் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். சென்னையில் பல உயிர்கள் பலியானது பல வீடுகள் சேமடைந்ததை அவர் நினைவு கூறவேண்டும். முன் அறிவிப்போடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய திராவிட மாடல் அரசிற்கு நன்றி தான் அவர் கூறியிருக்க வேண்டும் ஆனால் குறை சொல்கிறார். அண்டை மாநிலங்களும் பாராட்டும் அளவிற்கு  போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருந்தால் அவர் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருப்பவர். இது போன்ற இயற்கை பேரிடரை பார்த்தவர். முறையாக இழப்பீடுகளை கணக்கிடக் கூடியவர் உரிய முறையில் வழங்குவார். சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை நீர் திறக்கும் போதும் தண்டோரா மூலமாகவும் ஆட்சியர் மூலமாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதற்கான குறிப்புகளை கையில் வைத்துள்ளோம்.
சென்னையில் மழைக்கு ஒருமாதத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். 
அனைத்து மாவட்ட ஆட்சியர் இடத்திலும் காணொலி காட்சி வாயிலாக கூட்டங்களை நடத்தினார் முதல்வர். அதே போல் வானிலை ஆய்வு மையத்திலும் முறையாக தகவல் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தான் நிலச்சரிவை தவிர்த்து பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை.
    வருங்காலங்களில் வானிலை ஆய்வுகளை மேலும் துள்ளியமாக கண்டறியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்கும். பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிடுவதை விடுத்து மக்களின் துயரில் பங்கு கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேகர்ப-£பு கூறினார்.
பாக்ஸ்
தீபத் திருவிழா
திருவண்ணாமலை    கிரிவல பாதைகள் சரி செய்யப்படும். திருவண்ணாமலையில் அம்மன் ஊர்வலங்கள் நேற்று துவங்கியது. கடந்த முறையை விட 10%-20% கூட்டம் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார் போல் கிரிவலப்பாதையில் உள்ள பாதிப்புகள் சரிச்செய்யப்படும். ஏற்கனவே தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 6-, 7 தேதிகளில் மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பேருந்து, இரயில், அடிப்படை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 40 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும் என்றுசேகர்பாபு தெரிவித்தார்.
==
சேறு வீசியது மகளிர்அணி
விழுப்புரத்தில் குறிப்பிட்ட கட்சியினை சார்ந்த மகளிர் அணியை சார்ந்தவர்கள் வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றுசேகர்பாபு கூறினார்.
===

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க