tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, டிச.4
விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 
இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் கண்ணீர் மழையில் தவிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதில், “பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது:
ரூ.5லட்சம் இழப்பீடு
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்;
சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் வழங்கிடவும்;
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;
பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்;
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்;கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்;அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க