ஆன்மிகப்பாதையில் ஆலய தரிசனம்" புத்தகம்: ஐகோர்ட் நீதிபதி வெளியிட்டார்

ஆன்மிகப்பாதையில் ஆலய தரிசனம்" புத்தகம்: ஐகோர்ட் நீதிபதி வெளியிட்டார்

திருவாரூர், ஆக.25– -


திருவாரூரில் ஆன்மீக ஆனந்தம் அமைப்பு சார்பில், நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சார்பில், நூல் வெளியீட்டு விழா மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்றது.


விழாவில், ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் கார்த்திகேயன், வேலுடையார் கல்வி குழுமங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ். தியாகபாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரூரின் ஆன்மீகப் பாதையில் ஆலய தரிசனம் என்னும் நூலை, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் வெளியிட முதல் நூலை ஸ்ரீலஸ்ரீ ராகவன் குருஜி பெற்றுக் கொண்டார்.


ஆனந்த குருகுலம் மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் சிறப்பு யோகா நடத்தப்பட்டது. விழாவில்,தலைமை கௌரவ தலைவர் ஸ்ரீதரன், பால்வண்ணன், ஆன்மீக அன்பர்கள் ஆனந்த குருகுல மாணவ மாணவிகள் மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%