ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பலி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பலி

திருவாரூர், ஆக.25 -


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே கல்லூரி வாலிபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.


கூத்தாநல்லூர் அடுத்த சேகரை, காந்தி நகரைச் சேர்ந்த ரஜினி என்பவரது மகன் குகன் (18). இவர் மன்னார்குடி கலைக் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சுதர்சன் (17) ஆகிய இருவரும் சேகரை வெண்ணாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால், குகன் சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த சுதர்சன் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். உடன் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


தீயணைப்பு நிலை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சேகரை வெண்ணாற்றில் இறங்கி தேடினர். இரவு நேரம் என்பதால் இருட்டி விட்டதால் தொடர்ந்து தேட முடியாததால், தேடும் பணியை நிறுத்தி விட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் காலை ஆறு மணியிலிருந்து தேடினர். வெண்ணாற்றில் உள்ள பெட்டம் அருகே ஆற்றில் குவிந்துள்ள வெங்காய தாமரை இலையில், குகனின் உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். மேலும் கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜீன்யா, உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%