பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டி

பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கோவை, ஆக. 25–


பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் 27-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டிகள் கோவை, பீளமேடு, பிஎஸ்ஜி என்ஜினீயரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றது. இப்போட்டிக்கு பொது மக்களுக்கு அனுமதி இலவசம். போட்டிகள் தினமும் மாலை 5.30 மணிக்கு துவங்கும்.


நேற்று (24ந் தேதி) மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதலாவது போட்டியில் புது தில்லி -இந்திய விமானப்படை அணியை எதிர்த்து கோவை ராஜலட்சுமி மில்ஸ் எச்எஸ்எ அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 100–64 என்ற புள்ளி கணக்கில் வென்றது.


இரண்டாவது போட்டியில் லோனாவாலா இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து திருவனந்தபுரம் -கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்சார வாரிய அணி 84–55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.


மாலை 7 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் சென்னை- இந்தியன் வங்கி அணியை எதிர்த்து பெங்களூர் -பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 76–57 என்ற புள்ளி கணக்கில் வென்றது.


நான்காவது போட்டியில் சென்னை -இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து புதுடில்லி -இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 75–73 என்ற புள்ளி கணக்கில் வென்றது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%