திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா சாக்லேட்: 4 பேர் கைது

திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா சாக்லேட்: 4 பேர் கைது

சென்னை, ஆக. 25–


திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், இது தொடர்பான வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் திருவல்லிக்கேணி, எல்லீஸ் ரோடு சப்வே அருகில் கண்காணித்து, அங்கு இருசக்கர வாகனத்துடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.


அதன்பேரில், சட்ட விரோத விற்பனைக்காக போதைப்பொருள் வைத்திருந்த விகாஷ்குமார் டான்டி, ஹரிஹரன், கமலேஷ், கீர்த்திவாசன் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 250 கிராம் கஞ்சா, 36 கஞ்சா சாக்லேட்டுகள், பணம் ரூ.250/- மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.


கொக்கைன் பறிமுதல்:


2பேர் கைது


இதே போல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, தாஜுதீன், மற்றும் மணிகண்டன் (எ) கோவிந்த், ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிராம் எடை கொண்ட கொக்கைன் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப் பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%