காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 2 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நடவடிக்கை

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 2 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நடவடிக்கை

ஸ்ரீநகர்: ​

நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக தீவிர​வா​தி​களு​டன் தொடர்பு வைத்​துள்ள 2 அரசு ஊழியர்​களை பணி நீக்​கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்​தர​விட்​டுள்​ளார். பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு காஷ்மீர் உள்​ளூர் மக்​கள் உதவி செய்​வது அவ்​வப்​போது கண்​டு​பிடிக்​கப்​படு​கிறது.


அதன்​படி, பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய தீவிர விசா​ரணை​யில் வடக்கு காஷ்மீரின் குப்​வாரா மாவட்​டத்​தில் கர்னா என்ற பகு​தி​யில் அரசுப் பள்ளி ஆசிரிய​ராக பணி​யாற்​றிய குர்​ஷித் அகமது ராதெர் மற்​றும் கெரான் பகு​தி​யில் அரசு ஆடு வளர்ப்​புத் துறை​யில் இருப்பு கணக்​கு​கள் பராமரிக்​கும் ஊழியர் சையது அகமது கான் ஆகிய இரு​வரும் பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத அமைப்​பான லஷ்கர் இ தொய்​பாவுடன் தொடர்பு வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.


சட்டப்பிரிவு 311: இதையடுத்து அவர்​கள் இரு​வரும் கடந்த ஜனவரி மாதமே கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், அவர்​கள் இரு​வரை​யும் அரசுப் பணி​யில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று உத்தரவிட்டார். அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 311 (2) (சி), நாட்​டின் பாது​காப்பை கருத்​தில் கொண்டு அரசு ஊழியரை விசா​ரணை​யின்றி பணி நீக்​கம் செய்ய வழி வகை செய்​யப்​பட்​டுள்​ளது.


இந்த சட்​டத்​தைப் பயன்​படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்​கா, 2 பேரை​யும் பணி நீக்​கம் செய்​துள்​ளார். மேலும், 2 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிர​வாத அமைப்​புடன் நெருங்​கிய தொடர்பு வைத்​திருந்​ததற்​கான முழு ஆதா​ரங்​களை​யும் பாது​காப்​புப் படை​யினர் சேகரித்​துள்​ளனர். தீவிர​வாத கட்​டமைப்பை ஒடுக்​கும் வித​மாக இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது என்று பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.


இதுவரை 75 பேர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்​கும் 370-வது சட்​டப்​பிரிவு கடந்த ஆகஸ்ட் 2019-ம்

ஆண்டு ரத்து செய்​யப்​பட்ட பிறகு, இது​வரை​யில் 75 அரசு ஊழியர்​கள் தீவிர​வாத தொடர்பு வைத்​திருந்த குற்​றத்​துக்​காக பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%