துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தப்பட்ட சிகரெட் பறிமுதல்: 7 பேர் கைது
Aug 25 2025
18

கோவை, ஆக. 23–
துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேரை கைது செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதும். உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் துபாயில் இருந்து 1461 சிகரெட்டு பாக்கெட்டுகள், 213 எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், 12 உயர்ரக செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர். இதன் மதிப்பு ரூ.36.81 லட்சம் ஆகும். அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவாரூரைக் சேர்ந்த தருண் சேகரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அமாலுல்லா சுல்தான், பிரத்தியுனன் கெங்கமுத்து, சென்னையைச் சேர்ந்த மன்சூர்கான் பாபு, சிவகங்கையைச் சேர்ந்த யாசர் அராபத் அப்துல் ஜப்பார்,பைசல் அகமது முகமது யூசுப், திருநெல்வேலியைச் சேர்ந்த அஜ்மீர் காஜா மைதீன் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?