குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி: தி ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை
Aug 25 2025
17

திருப்பூர் தி ப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் தெற்கு குறுமையை அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் தெற்கு குறுமையை விளையாட்டுப் போட்டிகள் சர்க்கார் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பள்ளிகள் கலந்து கொண்டன. தி ப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி கலந்து கொண்டு, குழு விளையாட்டு போட்டிகளில் மாணவர் பிரிவில் 100 புள்ளிகள், மாணவியர் பிரிவில் 134 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
இறகுப்பந்து, கோ-கோ, கையுந்து பந்து, வளைக்கோல் பந்து, வளையபந்து, கைப்பந்து, கேரம், கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் அனைத்திலும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு, 50 புள்ளிகள் பெற்று, தடகளப் போட்டிகளில் மாணவியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளி முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?