கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு
Sep 09 2025
25

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்கெனவே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர்களிடம் இந்த பதற்றம் நிறைந்த பகுதியில் கொடியோ அல்லது வேறு ஏதும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மலர் அலங்கரிப்புகளோ வைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி பாஜகவினர் இந்த மலர் கம்பளத்தை உருவாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக, இருதரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடன் சேர்த்து மேலும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
எப்ஐஆரை திரும்பப் பெறுக: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது போடப்பட்ட எப்ஐஆரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?