சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
Sep 11 2025
11

காத்மாண்டு:
காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த பொது மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போதைய பாதகமான சூழ்நிலை, ராணுவக் கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள புகை காரணமாக பாதுகாப்பு மீது கவலை எழுந்துள்ளதால், விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, நேபாள உச்ச நீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து கோப்புகள், ஆவணங்கள் மற்றும் சேவையகங்கள் அழிக்கப்பட்டதாக தலைமை பதிவாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதன் காரணமாக, புதன்கிழமை திட்டமிடப்பட்ட விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், வியாழக்கிழமை முதல் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?