வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி:

இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது.


டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு பகு​தி​களை பார்​வை​யிட நேற்று மாலை இமாச்​சல் பிரதேசம் புறப்​பட்​டார். நேற்று மதி​யம் 1.30 மணி​யள​வில் காங்​கரா பகு​திக்​கும் வந்த பிரதமர் மோடி மண்​டி, குல்லு ஆகிய மாவட்​டங்​களில் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு பாதிப்பு பகு​தி​களை ஹெலி​காப்​டரில் சென்று பார்​வை​யிட்​டார். அதன்​பின் மாநில உயர் அதி​காரி​களை சந்​தித்து ஆலோ​சனை கூட்​டம் நடத்​தினர்.


இதில் மாநில ஆளுநர் சிவ் பிர​தாப் சுக்​லா, முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு, மத்​திய அமைச்​சர் ஜே.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்​டனர். அவருக்கு வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு பாதிப்பு குறித்து அதி​காரி​கள் விளக்​கினர். இங்கு மொத்​தம் 370 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் 205 பேர் மழை, வெள்​ளம், மற்​றும் நிலச்​சரிவு பாதிப்​பால் உயி​ரிழந்​தனர். 165 பேர் சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர்.


வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களை​யும் பிரதமர் மோடி சந்​தித்து பேசி​னார். வெள்​ளத்​தில் சிக்கி குடும்​பத்​தினரை இழந்த 11 மாத குழந்தை நீத்​தி​காவை​யும் பிரதமர் நரேந்திர மோடி சந்​தித்​தார். இந்த குழந்தை தற்​போது உறவினர்​களின் பாது​காப்​பில் உள்​ளது. மீட்பு பணி​யில் ஈடு​பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர், மாநில குழு​வினரிடம் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார்.


நிவாரணம் அறிவிப்பு: வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட இமாச்​சலப் பிரதேசத்​துக்கு ரூ.1,500 கோடி நிவாரண நிதி அளிக்​கப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​தார். இங்கு வீடு​களை இழந்த மக்​களுக்​கு, பிரதமரின் ஆவாஸ் யோஜனா மூலம் வீடு கட்டி தரப்​பட​வுள்​ளது. சேதம் அடைந்த நெடுஞ்​சாலைகள், பள்​ளி​கள் ஆகிய​வற்றை மீண்​டும் உரு​வாக்க பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து நிதி அளிக்​கப்​பட​வுள்​ளது. நஷ்டம் அடைந்த விவ​சா​யிகளுக்கு தேவ​யான உதவி​களும் அளிக்​கப்​பட​வுள்​ளன. சேதம் அடைந்த நீர்​நிலைகளும் சீர்​படுத்​தப்​படு​கின்​றன.


இமாச்​சலப் பிரதேசத்​தில் ஆய்வை முடித்​துக் கொண்​டு, பிரதமர் மோடி பஞ்​சாப் புறப்​பட்​டார். குர்​தாஸ்​பூரில் நேற்று மாலை 4.15 மணிக்கு நடை​பெற்ற ஆய்​வுக்​கூட்​டத்​தி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அங்கு வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களை​யும் பிரதமர் நரேந்திர மோடி சந்​தித்​தார். அம்மாநிலத்துக்கு ரூ.1600 கோடி நிதியுதவி அறிவித்தார். பஞ்சாபில் வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 51 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.


இழப்பீடு: வெள்ளத்தில் உயிரிழந்தவர் களுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோ ருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.




நிலம் உள்வாங்கியதில் காஷ்மீரில் 50 கட்டிடங்கள் சேதம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்’’ என்றார்.


கலாபன் கிராமத்துக்கு மாநில ஜல்சக்தி மற்றும் வனத் துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%