
திருக்கழுக்குன்றம், ஆக. 12–
பொன்மார் டிஏபிசி தனியார் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளரும், பொன்மார் முதல் நிலை ஊராட்சி மன்றத்தின் 9வது வார்டு கவுன்சிலருமான போலச்சேரி பி.என்.எஸ். செந்தில் ஏற்பாட்டில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலச்சேரி பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதனை பேணிக்காப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தி 5 வயது முதல் 60 வயது வரையிலான 500 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி-2025 நடைபெற்றது.
1.5 கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் தூரம் என ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடியது காண்போரை வியக்க வைத்தது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் நான்கு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பதக்கங்களை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்டக்குழு துணை தலைவர் மாம்பாக்கம் ஜி.சி.அன்பச்செழியன், பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், செங்கல்பட்டு மாவட்ட துணை பெருந்தலைவர் காயத்திரி அன்புச்செழியன், மாம்பாக்கம் துணை மின் பொறியாளர் சந்தானகுமார் ஆகியோர் வழங்கினர்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மார் சுரேஷ், 8வதுவார்டு கவுன்சிலர் ஆர் ராஜா, 2வது-வார்டு- கவுன்சிலர் மாலதி கணபதி, 3வது- வார்டு கவுன்சிலர் சுதாராணி பரணிதரன், 4-வது வார்டு கவுன்சிலர் நதியா மாரி, 5-வது வார்டு கவுன்சிலர்எம்.மகேஷ்வரன், 6-வதுவார்டு கவுன்சிலர் பி.எம்.எஸ்.ஜெயா சாமுண்டி, 7 வது-வார்டு கவுன்சிலர் டி.ஆர்.சத்ய பிரியாராஜன் மற்றும் கோவில் அறங்காவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை போலச்சேரி டிஏபிசி ஜெமினி மற்றும் இந்த பகுதியில் வசித்துவரும் சசிகுமார், பாலாஜி, யுவராஜ், செந்தில்நாதன், சதாசிவம், செந்தில்வேல், சுரேஷ், பாலா, தங்கவேல், ராஜேஸ்வரன், கணபதி, சுரேஷ்கண்ணன், செல்வம், கிஷோர், ரமேஷ், தங்கமணி, வைரம், விக்னேஷ், சிவசுப்பிரமணியம், அரவிந்தன் அருண், மனோராஜ், நிவேதன், மணி மற்றும் பி .என். எஸ் செந்தில் பிரதர்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?