பாலஸ்தீனர்களின் குரலாக இருந்த பத்திரிகையாளர் படுகொலை : திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

பாலஸ்தீனர்களின் குரலாக இருந்த பத்திரிகையாளர் படுகொலை : திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

காசா, ஆக.11-

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் பால ஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்த்த முக்கிய பத்திரிகையாளரான அல் ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல்-ஷரீப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 10, அன்று அல்-ஷிஃபா மருத்துவ மனை வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டி ருந்த பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் அல் ஜசீரா நிறுவனத்தின் செய்தியா ளர் 28 வயதான அனாஸ் அல்-ஷரீப் படுகொலை யானார். இத்தாக்குதலில் அனாஸ் அல்-ஷரீப் மட்டு மின்றி, அவரது சக பத்திரிகையாளர்களான முக மது குரைக்கே, இப்ராஹிம் ஜாஹெர், மோமன் அலிவா, முகமது நௌஃபல் ஆகிய நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணு வம் ஒப்புகொண்டது. அதுமட்டுமின்றி அந்த தாக் குதலை திட்டமிட்டு அரங்கேற்றியதாக தெரிவித் துள்ளதுடன் தாக்குதலை நியாயப்படுத்த அனாஸ் அல்-ஷரீப் ஒரு பயங்கரவாதி, அவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர். அவர் பத்திரிகையாளராக வேஷம் போட்டுள்ளார் என கட்டுக்கதைகளையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த பொய்குற்றச்சாட்டுகளை அல் ஜசீரா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள் ளது. அனாஸ் அல்-ஷரீப் காசாவின் மிகத் துணிச்ச லான பத்திரிகையாளர்களில் ஒருவர். அனாஸ் அல்-ஷரீப் மற்றும் அவரது சக பத்திரிகையாளர் கள் காசாவில் நிகழும் துயரத்தை இந்த உலகுக்கு சொல்லும் கடைசியாக உள்ள சில குரல்களில் ஒன்றாக இருந்தனர். இந்தத் தாக்குதல் காசாவில் நடக்கும் உண் மைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் குரல்களை ஒடுக்க இஸ்ரேல் மேற்கொள்ளும் ஒரு வீணான முயற்சி என இஸ்ரேலை கண்டித்துள்ளது. காசாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் படு கொலை செய்துள்ளது. இஸ்ரேலின் இனப்படு கொலைகளை பற்றி உலகிற்கு மிக தைரியமான கள அறிக்கைகளால் அம்பலப்படுத்திய அல்-ஷரீப் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் ஐ.நா அவையின் நிபுணர் குழுக்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%