தமிழர் குடியரசு துணை தலைவராக ஆதரவு அளிக்க வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்
Aug 21 2025
16

மயிலாடுதுறை:
தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவிததுள்ளார். மயிலாடுதுறையில் நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: மயிலாடுதுறை தொகுதி ஏற்கெனவே தேமுதிக கோட்டையாக இருந்தது. வரும் தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றிபெறும். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தொகுதியிலேயே கூட பேருந்து வசதிகள் இல்லை. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் திறந்ததைவிட வேறு பெருமை எதுவும் இல்லை.
தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் அது நிச்சயம் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கு பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜன.9-ல் கடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?