நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி பிரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், அரசியல் கட்சியினர் பங்கேற்பு

நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி பிரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், அரசியல் கட்சியினர் பங்கேற்பு


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் நன்னிலம் தொகுதியில் தற்போது 1,39,614 ஆண் வாக்காளர்களும், 1,43,832 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 17 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 463 வாக்காளர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்காக தற்போது தொகுதி முழுவதும் 324 வாக்கு சாவடி மையங்கள் இருந்து வருகின்றன. இவற்றில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்து வரும் வாக்கு சாவடி மையங்களை இரண்டாக பிரிப்பது மற்றும் பழுதடைந்த வாக்கு சாவடி மையங்களை கண்டறிந்து சீரமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படியும், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டர் மோகனச்சந்திரன் பரிந்துரையின் பேரிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டமானது தொகுதியின் வாக்கு பதிவு அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான சங்கர் தலைமையிலும், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கருணாகரமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் தாலூகாவில் 11 வாக்கு சாவடி மையங்களும், வலங்கைமானில் ஒன்று மற்றும் குடவாசல் தாலூக்காவில் 5 என மொத்தம் 17 வாக்குச்சாவடி மையங்களில் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு மேல் இருந்து வருவதால் இந்த வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரிப்பது மற்றும் பழுதடைந்த வாக்கு சாவடி மையங்களை சீரமைப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தாசில்தார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%