பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

சென்னை:

நடிகை கஸ்தூரி இன்று சென்னை தியாகராய நகரில் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.


இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத் குயின் இந்தியா (Namis South Queen India) நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், இணைந்தனர்.


சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி மற்றும் நமீதா மாரிமுத்து இன்று முதல் அதிகாரபூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%