பிறப்பு, இறப்பு பதிவுக்கு புதிய விதிகள் அறிவிப்பு

பிறப்பு, இறப்பு பதிவுக்கு புதிய விதிகள் அறிவிப்பு

சென்னை:

தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான புதிய விதிகளான “தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள், 2025”ஐ வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் 2000ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகளை மாற்றியமைக்கின்றன. புதிய விதிகளின்படி பிறப்பு மற்றும் இறப்புத் தகவல்களை அளிக்கும்போது அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும். எவ்விதமான சுருக்கங்களை யும் பயன்படுத்தக்கூடாது. ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 30 நாட்களுக்குப் பிறகு அல்லது ஒரு வருடத்திற்குள் பதிவு செய்ய விரும்பினால், இப்போது வட்டாட்சியர் அனுமதி வழங்கலாம். முன்பு இதற்குக் கிராம பஞ்சாயத்துத் தலைவரின் அனுமதி தேவைப்பட்டது. பதிவுகளில் குறிப்பிடப்படும் தேதிகள் dd-mm-yyyy என்ற வடிவத்தில் இருக்க வேண்டும். இனி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை மின்னணு வடிவத்திலும் பெற முடியும். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%