பாரதியார் நினைவு தின உரையரங்கின் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்...!
Sep 10 2025
11

வந்தவாசி, செப் 11:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி 'பாரதி கண்ட பாரதம்' என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சாந்தகுமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தமிழாசிரியை ஹேமலதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று, பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பாரதியின் பல்வேறு படைப்புகளை பற்றியும், சுதந்திர போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு பற்றியும், தமிழ் ஆளுமை பற்றியும் விவரித்துக் கூறினார். இந்த நிகழ்வில் கலைஞர் முத்தமிழ்ச் சங்க தலைவர் வந்தை குமரன், ஊடகவியலாளர் அ.ஷாகுல் அமீது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?