
நீலகிரி, ஆக. 25–
மசினகுடியில் வயது மூப்பின் காரணமாக புலி ஒன்று நேற்று மாலை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் வயது மூப்பு காரணமாக உடல் மெலிந்து, வேட்டையாடும் திறனை இழந்த புலி ஒன்று வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
சமீப நாட்களில் அந்தப் புலி இயல்பான இரைகளைப் பிடிக்க முடியாமல், கிராமப்புறங்களில் கிடைக்கும் இறைச்சிக் கழிவுகளை உண்டு வாழும் நிலை ஏற்பட்டு இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலியின் நடத்தை மற்றும் இயக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வனத்துறை கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் உபகரணங்களை பல இடங்களில் அமைத்தனர். 24 மணி நேரமும் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, புலி மனிதர்கள் இருக்கும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் இருந்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
“புலியின் வயது அதிகம், அதன் உடல் நிலை பலவீனமடைந்துள்ளது. இதனால் எளிதில் கிடைக்கும் இறைச்சிக் கழிவுகளை உண்டு வாழும் நிலையில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மை; எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்” என்று தெரிவித்த நிலையில் நேற்று 24ம் தேதி மாலை புலி இறந்து கிடந்தது கண்டுப் பிடிக்கப்பட்டது. இறந்த புலியின் பிரேதப்பரிசோதனை என்டிசிஏ வழிக்காட்டுதலின் படி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படடு வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?