வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.08.25


அன்புடையீர்


 வணக்கம். 23.8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் யாரும் இனி சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது என்ற நம் பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் பேச்சை ரசித்து படிக்க முடிந்தது இன்றைய பஞ்சாங்கம் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த வெறும் வயிற்றில் நீயில் வருத்த வெந்தயம் சாப்பிட்டால் அற்புதமான பலன் கிடைக்கும் என்ற தகவல் நல்ல பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் வரலாறு மிகவும் அருமை படிக்கும்போது உடலும் உள்ளமும் புல்லரித்தது.


பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் எல்லாமே மிகவும் அருமை நல்ல காலம் என்ற அந்த பகுதி படிக்கும்போது ரசிக்க வைத்தது.


வாழ்க தரும் ஆரோக்கியம் பகுதியில் மூலநோய் தீர்க்க அற்புதமான மருத்துவ வழி சொன்னது ஒரு மருத்துவ வருடம் நேரில் சென்று ஆலோசனை பெற்றது போல மகிழ்ச்சியாக இருந்தது.


பதினாறாம் பக்கம் என்றாலே பரவசமூட்டும் செய்திகளும் ஆன்மிக படங்களும் மிகவும் அருமையாக இருக்கும். அது இன்றும் என்னை மன மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஒவ்வொரு படத்தையும் ரசித்து பார்த்து அந்த கோவிலுக்கு சென்று கடவுளை நேரில் தரிசனத்தது போல மகிழ்ந்தேன் 


சுற்றுலா பக்கத்தில் வந்த தமிழகத்தில் உள்ள சிறந்த மலை சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல் மிகவும் அருமை. சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு மிக எளிதாக அந்த இடங்களை சென்று பார்த்து மகிழ உதவும் நல்ல தகவல் உள்ள பகுதி.


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ரூபாய் 36 கோடி வரி பாக்கி என்று தீபா அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் பற்றிய செய்தியை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.


டெல்லியில் சாலையில் உலாவும் அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைக்க தேவையில்லை என்ற கெடுபிடியை தளத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்ததும் நாய்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற மன நிறைவு கிடைத்தது. 


அமெரிக்காவுக்கு ரூபாய் 19 லட்சம் பைக்கை பரிசளித்த பதின் பற்றிய செய்தியை படித்ததும் இப்படி எல்லாம் கூட செய்வார்களா என்று ஒரு ஆச்சரியம் தந்த செய்தியாக இருந்தது.


சனிக்கிழமை விடியலை சந்தோஷமாக விடிவதற்கு உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு சந்தோஷமான மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%