வாசகர் கடிதம் (உஷா முத்தூராமன்) 13.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்தூராமன்) 13.08.25

அன்புடையீர் 

வணக்கம் 13 .8. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்களை கொடுக்கும் திட்டம் மிக அருமையான திட்டம் என பாராட்டு வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் படித்து இன்றைய போது எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு என்னுடைய நாளை தொடங்க மிக அருமையாக அமைந்தது.


பத்தாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்த மதுரை மேலூரில் உள்ள நாகம்மாள் கோவில் ஆடி உற்சவம் மிக அற்புதமான காட்சியாக கண்ணுக்கு விருந்தளித்தது. நூலக தந்தை அரங்கநாதன் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


இஞ்சி காய்ந்தால் சுக்கு என்று தெரியும். அதனுடைய மருத்துவ குணங்களை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து இவ்வளவு நல்ல குணமுள்ள சுக்கு மல்லி காப்பிய தயாரித்து குடிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வைத்த நல்ல தகவல் பாராட்டுக்கள்.


மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை தனியாருக்கு விற்பதா என்று அன்புமணி ராமதாஸ் அவர்களின் கண்டனமான பேச்சு கேட்டு அரசியல் நன்கு புரிய வைத்தது. புதுச்சேரியில் விதிகள் மீறிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தப்பட்டது புதுச்சேரியில் நடப்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இன்று சுசேதா கிருபாளினி அவர்களின் வரலாறும் அவருடைய அந்த கால பழைய புகைப்படமும் நல்ல கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு மருந்தாகவும் இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள். 


முக்கனி சுவையுடைய மீம்ஸ் விடுகதை மீம்ஸ் ஜோக்ஸ் இவை பல்சுவை களஞ்சியம் பகுதிக்கு மெருகு சேர்ப்பதுடன் எனக்கு விருந்தாகவும் அமைந்தது மற்றும் நிறைந்த பாராட்டுக்கள் .


தமிழ்நாடு இ பேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் சார்பில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை படத்துடன் பார்க்கும் போது மிகவும் அருமையாக இருந்தது. நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்ற நல்ல தகவல். மனம் நிறைந்த பாராட்டுக்கள். தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் அன்னங்குடி ஊராட்சியில் தொடங்கப்பட்டது மிக அருமை பாராட்டுக்கள் .


சுற்றுலா பக்கத்தில் வந்த மனசுக்கு உற்சாகமும் அமைதியும் ஆனந்தமும் தரும் பிச்சாவரம் என்று படகு சவாரியை பார்த்தவுடன் நான் பிச்சாவரத்திற்கு சென்ற அந்த மலரும் நினைவுகள் வந்து என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.


மேலும் 476 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் செய்த இந்த செய்தி தேர்தல் வரப்போவதை முரசு கொட்டி அறிவிப்பது போல இருந்தது. க்ரைம் கார்னர் மிகவும் அருமை விழிப்புணர்வுடன் இருக்க நல்ல தகவல்களை அழகாக கொடுப்பது பாராட்டுக்குரியது .


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது ஆட்சியில் இதுவரை 1700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க டில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு செய்தது மிகவும் அருமையான தகவல். இதனால் நாய் உயிரினங்கள் பாதுகாக்கப்படும்.


காசா பத்திரிகையாளர்கள் பலி கேள்விக் குறியாக மக்களின் உயிர் என்ற செய்தி அயல் நாட்டுக்கு என்னை அழைத்து சென்றுவிட்டது. சட்டவிரோத குடியர்களை பிரிட்டன் எச்சரிக்கை செய்தது மிகவும் அருமையான தகவல்.


புத்துணர்வு தரும் புதன்கிழமை விடியலில் புதிய செய்திகளை தமிழ்நாடு இ பேப்பரில் படித்து மகிழ்ந்தேன். இதற்கு அருமையாக பாடுபட்ட இந்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 


உஷா முத்தூராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%