
ஹரணியின் 'இரவல் வேண்டாம்' என்ற சிறுகதை, ஒரு பிஞ்சு மனதில் மிஸ் சொன்ன இரவல் வாங்கக்கூடாது என்ற வார்த்தை பதிந்தவிதமும், அதற்காக அது தனக்கான ஸ்நாக்ஸை தியாகம் செய்ய நினைத்தவிதமும் மிகவும் அருமை. ஒரு சிறுகதை என்றால் இப்படிதான் உண்மையாக இருக்கவேண்டும்.
தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'குப்பைக்கு...குட் பை' சிறுகதை, நாம் இப்போது ஆறு, குளம், குட்டை, சுற்றுப்புறமெங்கும் எப்படி அசுத்தமாக்கி வருகிறோம் என்பதை மனதில் பதியும் வண்ணம் உணர்த்தி சிந்திக்க வைத்தது. என்னதான் விஞ்ஞானிகள் எதைதான் கண்டுபிடித்தாலும் மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்துக்கொண்டால்தான் நாடும், உலகமும் தூய்மையாகும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?