வாசகர் கடிதம் (வளர்மதி ஆசைத்தம்பி) 24.08.25

வாசகர் கடிதம் (வளர்மதி ஆசைத்தம்பி) 24.08.25


" 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல். அவரது தராதரம் அவ்வளவுதான் "

என்று அமைச்சர் நேரு பேசியிருக்கிறார்.


தேர்தல் மேகங்கள் தமிழகத்தை சுற்றி வரும் இவ்வேளையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மாநாடு நடத்தும் விஜய் பேசியது ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை என்றே தோன்றுகிறது.


இப்போதெல்லாம் அரசியல் கட்சியின் கூட்டங்களுக்கு வரும் அல்லது அழைத்து வரப்படும் பல தொண்டர்கள் நிகழ்ச்சி முடிவில் கிரிமினல்களாக மாறி விடுகின்றனர்.


தாங்கள் அமர்ந்திருந்த வாடகை நாற்காலிகளை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். விஜய் மாநாட்டின் முடிவில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன


.அப்படி உடைந்து போன, திருட்டு போன நாற்காலிகளுக்கு நஷ்ட ஈட்டை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தர வேண்டி இருக்கும்.


குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு வாட்டர் டேங்குகளை தொண்டர்கள் திருடி தலையில் வைத்துக் கொண்டு ஓடி விட்டனர்

என்றும் பல இரும்பு குழாய் தடுப்புகளையும் ஏராளமான தகர சீட்டுகளையும் காணவில்லை என்றும் தொலைக்காட்சியில் செய்தி வந்தது. 


ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஒரு ஆண்டில் 45 கோடி இந்திய மக்கள் 20000

கோடி ரூபாய்களை இழக்கிறார்கள் என்ற செய்தி அதிர வைத்தது.


மனிதனின் ஆசையை தூண்டி விட்டு அவனிடம் உள்ள பணத்தை பறித்து விட்டு அவனை தற்கொலைக்கு தூண்டும் படியான செயலை செய்யும்

சூதாட்ட செயலிகளை உடனே தடை செய்ய வேண்டியது அவசியம்.


வளர்மதி ஆசைத்தம்பி

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%