
வி.கே.லஷ்மி நாராயணன் எழுதிய " தொண்டுள்ளம்" அனிதா, அவர் தம் பெற்றோர் பரிசாகக் கிடைத்த ₹5000 ஐ வீட்டு வேலைக்காரி தங்கத்தின் மகள் படிப்பிற்கு பரந்த மனப்பான்மையோடு தந்தது பாராட்டத்தக்கது.
உமா வெங்கடேசன் எழுதிய " இராமாயணத்தின் இறுதிப்பகுதியில்" உடல் என்பது உறை ஆன்மா என்பது வாள், உடலுக்குத் தான் அழிவுண்டே தவிர ஆன்மாவிற்கு அழிவு கிடையாது என்ற விளக்கம் அருமை.
பிறப்பு உறுதி செய்யப்பட்ட போதே, இறப்பும் உறுதி செய்யப்பட்டது. தேதி வேண்டுமானால், யார் எப்போது எனத் தெரியாதிருக்கலாம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் " அர்த்தமுள்ள இந்து மதம்" நூலில் தேதி தெரியாதிருப்பதே நல்லது இல்லையேல் ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்க மாட்டார்கள், அது தெரிந்தால் நான் இன்ன தேதியில் போகிறேன், நீ எந்த தேதியில் போகிறாய் எனக் கேட்பர், கடன்காரன் பணத்தை வசூல் செய்ய முன் கூட்டியே வருவான் எனக் குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?