
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் அசாம்-நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திலாய் பகுதியில் 6 மைல் தொலைவில் ஒரு இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் லாரி டிரைவரின் இருக்கைக்குப் பின்னால் 10¾ கிலோ மார்பின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை போலீசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.11 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இந்த போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யார், யாருக்கு இந்த போதைப்பொருள் வினியோகிக்கப்பட இருந்தது? என்பது குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?