அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு
Oct 11 2025
78
லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சைவ உணவு இல்லை. அசைவ உணவுதான் இருக்கிறது. அதை சாப்பிடுங்கள் என்று விமான பணிப்பெண் கூறியிருக்கிறார். வேறு வழியின்றி அதை வாங்கி சாப்பிட்ட அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அசோகா உயிரிழந்தார்.
இந்நிலையில், அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை
சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் வசித்து வரும் திருப்பதி மோகன்தாஸ் (வயது 41) கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தியரான அவர் கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
பின்னர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அந்த பெண் கூச்சலிட்டதால் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் நடந்த 2 நாள் கழித்து மோகன்தாஸ் மீண்டும் அங்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். எனவே மோகன்தாசுக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?