அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி
Nov 23 2025
15
மக்கள் சந்திப்பு பயணத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், ஒழுங்குபடுத்தவும் மக்கள் பாதுகாப்பு படையை விஜய் உருவாக்கி உள்ளார்.
சென்னை,
கரூர் சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வருகிறார். டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் இருந்து தனது பயணத்தை விஜய் தொடங்க இருந்தார். தற்போது அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வேறு ஒரு தேதியில் சேலத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். இதற்கிடையே, இனி தான் மேற்கொள்ளும் பொதுக்கூட்டம் வடிவிலான மக்கள் சந்திப்பு பயணத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், ஒழுங்குபடுத்தவும் மக்கள் பாதுகாப்பு படையை விஜய் உருவாக்கி உள்ளார். இந்த மக்கள் பாதுகாப்பு படையில் இடம் பெறுபவர்கள், கட்சியின் தொண்டரணியினருடன் இணைந்து செயல்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மக்கள் பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரி ரவிக்குமார் இந்த பயிற்சியை அளித்து வருகிறார்.
ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி விரைவில் நிறைவுபெற இருக்கிறது. அந்த பயிற்சி முடிந்ததும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்று, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?