அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு: இபிஎஸ் உறுதி

அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு: இபிஎஸ் உறுதி

தென்காசி:

அ​தி​முக ஆட்சி அமைந்​ததும் வீட்​டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி கூறி​னார்.


‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் தமிழகம் முழு​வதும் பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூரில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் தமிழகம் அமை​திப் பூங்​கா​வாகத் திகழ்ந்​தது.


அதி​முக மதம், ஜாதிக்கு அப்​பாற்​பட்ட கட்​சி. அதி​முக ஆட்​சி​யில் முஸ்​லிம்​களுக்கு ஏராள​மான நன்​மை​களை செய்​துள்​ளோம். அப்துல் கலாம் குடியரசு தலை​வ​ராக வர வேண்​டும் என்​ப​தற்​காக வாக்​களித்​தோம். அப்​போது அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட வேட்​பாள​ருக்கு வாக்​களித்​தது திமுக.


இதே​போல, கிறிஸ்​தவர்​களுக்​கும் ஏராள​மான நலத் திட்​டங்​களை நிறைவேற்​றினோம். சிறு​பான்மை மக்​களுக்கு அரணாகத் திகழ்​வது அதி​முக. அதி​முக​வின் 10 ஆண்டு ஆட்​சி​யில் 67 கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள், 17 மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை​கள், 21 பாலிடெக்​னிக் கல்​லூரி​கள், 5 கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் கொண்​டு​வந்​தோம். ஆனால், 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் ஒரு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யா​வது கொண்​டுவர முடிந்​த​தா?


தமிழகம் முழு​வதும் தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களை புதி​தாக உரு​வாக்​கினோம். திமுக ஆட்​சி​யில் ஒரு மாவட்​ட​மாவது உரு​வாக்​கப்​பட்​ட​தா? தமிழகத்​தில் மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​ததும், வீட்​டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு​கள், வீட்டுமனை இல்​லாதவர்​களுக்கு வீட்​டுமனை​யுடன் கான்​கிரீட் வீடு​கள் கட்​டித் தரப்​படும். தீபாவளிக்கு பெண்​களுக்கு சேலை வழங்​கப்​படும். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்.


இதைத் தொடர்ந்து புளி​யங்​குடி, சங்​கரன்​கோ​விலில் பிரச்​சா​ரம் செய்​தார். முன்​ன​தாக, நேற்று காலை​யில் குற்​றாலத்​தில் மாற்​றுக் கட்​சிகளைச் சேர்ந்த பலர் பழனி​சாமி முன்​னிலை​யில் அதி​முக​வில் இணைந்​தனர். ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு சீருடைகள், பொது மக்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை பழனி​சாமி வழங்​கி​னார். விவ​சா​யிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்​களை பெற்​றுக்​கொண்டார்.


நிகழ்ச்​சி​யில் தென்​காசி வடக்கு மாவட்ட செய​லா​ளர் கிருஷ்ண​முரளி எம்​எல்ஏ, தெற்கு மாவட்ட செய​லா​ளர் செல்​வ​மோகன்​தாஸ் பாண்​டியன், முன்​னாள் அமைச்​சர் வி.எம்​.​ராஜலெட்​சுமி உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%