" மீண்டும் சந்திப்பு
திகட்டாத அமுதம்
மேடு பள்ளம்
பார்க்காத நீரோட்டம் ..."
பள்ளிப் பருவ
சந்திப்பு மேற்பள்ளி
பருவ சந்திப்பு
பயிலக சந்திப்பு
கல்லூரி சந்திப்பு ....."
எத்தனையோ
ஆண்டுக்கு பிறகு
பழைய மாணவர்கள்
இணைப்பு .... "
கர்வம் ஆணவம்
பணம் அதிகாரம்
பதவி பகட்டு
மறைந்து மறந்து
நிற்கும் கோவில் ..."
மனதின் நினைவுகள்
எதிரொலிகள்
அன்பு ஊற்று
பெருக்கெடுத்து ஓடும் ...."
வயது காலம்
படிப்பு வரட்டு கெளரவம்
ஏக்கம் தாக்கம்
விலகி நிற்கும் ..."
மதம் மொழி
ஜாதி மறந்து
அகம் மகிழ
சிரிக்க வைக்கும்
மாமேடை .... "
சொல் எழ மறுக்க
மௌனம் மேடை
ஏற அன்பும்
துளிர்க்கும்
கண்ணீரும்
அடையாளம் ..."
மருந்து ஆம்
மாற்று மருந்து
புனித இடம்
சந்திப்பு
சந்தோஷ சிந்திப்பு .... "
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?