அனுபவம்புதுமை

அனுபவம்புதுமை



நேற்று என் வேலைகளை முடிக்க ஆபிஸில் உட்கார்ந்திருந்தேன்..


என்னுடைய அதிகாரி ஒரு கேள்வி கேட்டார்


சிம்ம சொப்பனம் என்றால் என்ன...


சிங்கம் கனவு காணுதல்..


இது பொருள்..விளக்கம் வேண்டும்..


தெரியலையே..


நான் ஒரு சொற்பொழிவில் கேட்டேன் சொல்லட்டுமா...


சொல்லுங்கள் சார்..


யானை மிகப் பெரிய பலம் கொண்ட மிருகம்..எந்த விதமான மிருகங்களையும் போரிடத் தயங்காது ஆனால்..சிங்கம் தனது கனவில் வந்தால் கூட பயந்திடுமாம்


அதுதான் யானையின் சிம்ம சொப்பனம் என்பதே..சிம்ம சொப்பனமாகியது


நினைத்த மாத்திரத்தில் பயம் வந்தால் அதுதானே சிம்ம சொப்பனம்


கனவு எனத் தெரிந்தும் பயத்திலேயே வைத்திருக்கும் சிம்மத்திற்குப் பெருமை ஏற்படுத்திய முன்னோர் யானையின் சிறுமையைச் சொல்லாமல் விட்டது இன்னும் சிறப்புதானே...


Bhanumati Naachiar

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%