news Breaking News
clock

தாதப்பநாயக்கன்பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் பூமி பூஜை

தாதப்பநாயக்கன்பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் பூமி பூஜை


வாடிப்பட்டி, பிப்.9-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டியில் பேரூராட்சி பொது நிதி ரூ.40லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.இந்த பூஜைக்கு பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க.ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், முன்னாள் பேரூராட் சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூ ராட்சி துணை தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ்,கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வார்டு கவுன்சிலர் சரஸ்வதி ராமு வரவேற்றார். இந்த பூமி பூஜையை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.இதில் தாதப்பநாயக்கன் பட்டி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கண்ணதாசன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News