செஞ்சி திண்டிவனம் சாலை சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா

செஞ்சி திண்டிவனம் சாலை சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா



செஞ்சி பிப் 09


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள சங்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் செல்வ விநாயகர்,வீர விநாயகர்,பாலமுருகன்,ஐயப்பன்,அரச மரத்தடி விநாயகர்,நவகிரக சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் 06/02/2026ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம்,அங்குறாற்பணம்,முதல் யாகசாலை பூஜை தொடங்கியது .தொடர்ந்து 07/02/2026 சனிக்கிழமை அன்று இரவு கணபதி ஹோமம்,நவகிரக பூஜை,தீக்ஷா ஹோமம், இரண்டாம்யாகசாலை நடைபெற்றது. 08/02/2026 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை,கணபதி பூஜை,மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி மூன்றாம் யாகசாலை நடைபெற்றது. கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேல் ஒலக்கூர் ஸ்ரீ லலிதானந்தா ஆசிரமம்த்தின் ராமானந்தா சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%