-------------------------------
பிரபல வார இதழ் நடத்திய, நாவல் எழுதும் போட்டியில், சந்திரனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது.
இதற்காக, போட்டியில் கலந்து கொண்டு சந்திரனோடு வெற்றிப் பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் சேர்த்து பத்திரிகை நிர்வாகம் பாராட்டுவிழா நடத்தி பரிசுகளை வழங்கி, சிறப்பித்தது.
பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சந்திரன், விழா முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்கு ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால்,
சாதாரண டிக்கெட்டை வாங்கி கொண்டு முன் பதிவில்லா பெட்டிக்குள் நுழைந்தான்.
பெட்டியின் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு நடைபாதையிலும் பயணிகள் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.
எப்படியோ முண்டி யடித்துக் கொண்டு உள்ளே சென்றவனுக்கு கழிவறை அமைந்துள்ள இடத்தில் உட்கார சிறிது இடம் கிடைத்தது.
கூலி வேலை செய்வோர்,கட்டிட வேலை செய்வோர்,
வீட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் சந்திரனும் அமர்ந்து செல்லும் சூழல் ஆகிவிட்டது.
அவர்கள் ஒவ்வொரி டமும் அவர்களின் குடும்ப பின்னணி,அவர்கள் செய்யும் வேலை விபரம் ஆகியவற்றை
அவர்களோடு ஜாலியாக பேசியபடியே கேட்டு தெரிந்து கொண்டான்.
அவர்களோடு ரயிலில் நடைபாதையில் அமர்ந்து பயணித்த அனுபவம் சந்திரனுக்கு ஒரு புதுமையாக இருந்தது.
சந்திரன் இறங்க வேண்டிய இடம் வந்ததும்,அவனோடு அருகில் அமர்ந்து பயணித்த அனைவரிடமும் விடைபெற்றுக்கொகொண்டு இறங்கினான்.
வளர்ந்து வரும் எழுத்தாளர் சந்திரனுக்கு இந்த ரயில் பயண அனுபவத்தில் அடுத்த நாவலுக்கான கரு கிடைத்துவிட்டது.
--------------------------------

ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?