எனது நண்பன் ஒருவன் அவன் அப்பாவுக்குக் கடிதம் எழுதினான். அன்புள்ள அப்பா,
நான் இங்கு நலமாக உள்ளேன். அது போல் தாங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு அவசரமாக ரூபாய் 5000/- தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வைக்கவும்.
அன்புடன்,
இனியன்.
ஒரு வாரம் ஆயிற்று. அவன் அப்பாவிடமிருந்து பணம் வரவில்லை.
மீண்டும் அவன் அப்பாவிற்குக் கடிதம் எழுதினான்.
அன்புள்ள அப்பா,
சென்ற வாரம் ரூபாய் 5000/- அனுப்பும்படி கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை பணம் வரவில்லை. அவசரமாகத் தேவைப்படுவதால் உடனே அனுப்பி வைக்கவும்.
ஒரு வாரம் ஆயிற்று. ஆனால் பணம் வரவில்லை.
மீண்டும் ஒரு கடிதம் எழுதினான். கடிதத்தில் தேதி, அன்புள்ள அப்பா என்று எதுவுமே எழுதவில்லை.
பணம் அனுப்புறய இல்லையா? அனுப்புனா அனுப்பு, அனுப்பாட்டிப்போ....
இத்துடன் கடிதத்தை முடித்துக் கொண்டான்.
அடுத்த நான்கு நாட்களுக்குள் ரூபாய் 5000/- வந்தது.

அன்புடன்,
உ.மு.ந.ராசன்கலாமணி
கோவை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?