
வந்தவாசி , அக் 14
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 94 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் வந்தவாசி காவல் ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி பங்கேற்று பனை விதை நடவு செய்து துவக்கி வைத்தனர். நிகழ்விற்கு அறக்கட்டளை நிறுவனர் அசாருதீன் தலைமை தாங்கினர். பாதிரி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை விதை நடவு செய்யப்பட்டது.
மேலும் அறக்கட்டளை உறுப்பினர்கள்கள் வசீகரன், சுகிசிவம், சுரேஷ் குமார், அஜித் குமார், விஷ்வா, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?