அப்பாவுடன் நடைபயிற்சி

அப்பாவுடன் நடைபயிற்சி



மஞ்சள் வெயிலது வானில் முளைக்கையிலே..


அப்பாவும் கிளம்பினாரே நடைபயிற்சிக்கு.. 


நானும் எந்தன் சிறுகால் நுழைத்தே.. 


ஷூவுடன் ரெடியாக புன்னகைத்தாரே அவரும்.. 


அம்மாவுக்கு கையசைத்து டாட்டா காண்பித்து.. 


வேகநடை போட்டேன் அப்பாவுடன் போட்டியிட்டே.. 


பூங்காவது வந்தவுடன் அமர்ந்துகொண்டேன் மரமருகே. 


அதே புன்னகையுடன் அப்பாவும் சுற்றினாரே பூங்காவை.. 


சுற்றிலும் பிற்களது அடர்த்தியாய் முளைத்திருக்க.. 


சின்னஞ்சிறு கிளையில் 

கூடியிருந்தன மைனாக்கள்.. 


அவைகளுடன் அளவளாவி சூரியனுடன் சம்சாரித்து..


மண் அளாவி விளையாண்டு காத்திருக்க..

வந்தாரே அப்பாவும் நேரம் பார்த்து..


சத்தமாய் சொன்னேன் சிட்டொன்று புதுசாய்..

வந்து குலவியது காத்திருந்த பறவையுடன்..


தலையசைத்து அதிசயித்தார்

என் இயல்பு பார்த்து..

சின்ன பூவொன்றை பரிசாய் கொய்து கொடுத்திட..


என் வார நாளது இன்பமாய் தொடங்கிடில்..

உற்சாகம் பொங்குது மனதுக்குள் எப்போதும்..


உன் தந்தையுடன் போவாயோ நீயும்..

காதில் சொல்லிவிடு ஆமாம்

ஆசையுடனேயென்று..


💐💐

தஞ்சை பியூட்டிஷியன் 

 உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%