அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

டல்லாஸ்:

அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாநிலம் டல்​லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்​தில் மேலா​ள​ராக கர்​நாட​காவை சேர்ந்த சந்​திரமவுலி நாகமல்​லையா (50) என்​பவர் பணி​யாற்றி வந்​தார். இவர் தனது மனைவி நிஷா மற்​றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்​திலேயே தங்​கி​யிருந்​தார்.


இந்​நிலை​யில் கடந்த புதன்​கிழமை காலை உணவகத்​தின் மற்​றொரு ஊழிய​ரான யோர்​டானிஸ் கோபோஸ் மார்​டினெஸ் (37) ஓர் அறையை சுத்​தம் செய்​த​போது அங்கு சென்ற நாகமல்​லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்​படுத்த வேண்​டாம் என கூறி​யுள்​ளார். இதில் இரு​வருக்​கும் இடை​யில் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த மார்​டினெஸ் நாகமல்​லை​யாவை கத்​தி​யால் சரமாரி​யாக தாக்​கி​னார்.


அப்​போது நாகமல்​லை​யா​வின் மனை​வி​யும் மகனும் தடுக்க முயன்​றுள்​ளனர். எனினும் அவர்​களை தள்​ளி​விட்​டு, நாகமல்​லை​யாவை தலையை துண்​டித்து மார்​டினெஸ் கொடூர​மாக கொலை செய்​தார். துண்​டிக்​கப்​பட்ட தலையை எட்டி உதைத்த மார்​டினெஸ், பிறகு அதை எடுத்து குப்​பைத் தொட்​டி​யில் போட்​டு​விட்டு அங்​கிருந்து புறப் பட்​டுள்​ளர். தகவலறிந்த போலீ​ஸார் ரத்​தக் கறை​யுடன் இருந்த மார்டி னெஸை கைது செய்​தனர். போலீஸ் விசா​ரணை​யில் மார்​டினெஸ் தனது குற்​றத்தை ஒப்​புக்​கொண்​டுள்​ளார்.


கியூ​பாவை சேர்ந்​தவ​ரான மார்ட்​டினெஸ் ஏற்​கெனவே ஆட்டோ திருட்​டு, தாக்​குதல் உள்​ளிட்ட குற்​றப் பின்​னணி கொண்​ட​வர் எனவும் அவரை ஜாமீனில் வெளிவர முடி​யாத பிரிவு​களின் கீழ் கைது செய்​துள்​ள​தாக​வும் டல்​லாஸ் போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த கொடூர கொலைச் சம்​பவம் அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய சமூகத்​தினரை அதிர்ச்சி அடையச் செய்​துள்​ளது.


நாகமல்​லை​யா​வின் மனைவி நிஷா, கல்​லூரிப் படிப்பை தொடங்​க​விருக்​கும் மகன் கவுரவ் ஆகியோ​ருக்​காக நிதி திரட்​டு​வதற்​காக இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஒரு​வர் 'கோஃபண்ட்மீ' என்ற பெயரில் இணைய பக்​கத்தை தொடங்​கி​னார். அதில் நன்​கொடை அடுத்த சில மணி நேரத்​தில் 54,000 டாலரை கடந்​தது. நாகமல்​லை​யா​வின் துயர மரணத்​திற்கு ஹூஸ்​டனில் உள்ள இந்​திய துணைத் தூதரகம் இரங்​கல் தெரி​வித்​துள்​ளது. நாகமல்​லை​யா​வின் குடும்​பத்​தினருடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும் சாத்​தி​ய​மான அனைத்து உதவி​களை​யும் செய்​து வரு​வ​தாக​வும்​ தூதரகம்​ தெரி​வித்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%