அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டும் நன்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர்... காரணம் என்ன...?

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டும் நன்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர்... காரணம் என்ன...?


 

 இஸ்லாமாபாத்,


இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து சரமாரி வான்தாக்குதல் நடத்தப்பட்டது.


இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனையடுத்து மே 10-ந்தேதி இரு நாடுகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போரை பேச்சுவார்த்தை மூலம் தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா அதனை முற்றிலும் மறுத்து வருகிறது.


இந்தநிலையில் அசர்பைஜான் ராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம். இதனால் பல லட்சம் மக்களின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளார். எனவே டிரம்புக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக அவர் பேசினார்.


போர் நிறுத்தத்தில் மூன்றாவது தரப்பினர் தலையீட்டை இந்தியா மறுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%