அமெரிக்க ஓபன் டென்னிஸ் தரவரிசை இல்லாமல் 4:46 மணிநேரம் போராடிய வீரர்கள்
Aug 30 2025
11

ஆண்டின் கடைசி கிராண் ட்ஸ்லாம் மற்றும் 144 ஆண்டுகால பழமை யான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்க சுற்று ஆட்டங்கள் (நியூயார்க் - அமெரிக்கா) நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத் தில் தரவரிசையில் இல்லாத வீரர் களான ஜெர்மனியின் ஆல்ட்மையேர், செர்பியாவின் மெட்ஜேடோவிச் மோதி னர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி அடுத்தடுத்து கேம்களை ருசித்தனர். இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தது. 4:46 மணிநேரம் நீண்ட இந்த ஆட்டத்தில் ஆல்ட்மையேர் 7-5, 6-7 (3-7), 7-6 (9-7), 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்
: ஜுவரேவ் (ஜெர்மனி), பவுல் (அமெரிக்கா), டி மினார் (ஆஸ்தி ரேலியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெலிக்ஸ் (கனடா)
ஒசாகா அபாரம்
2 முறை அமெரிக்க ஓபன் பட்டம் என 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்க னையான நவோமி ஒசாகா (தரவரிசை - 32) தனது முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத கிரீட் மென்னனை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற ஒசாகா பார்ம் பிரச்சனை யால் கடந்த 4 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் :
கோகா கவுப் (அமெரிக்கா), வெக்கிச் (குரோஷியா), அலெக்ஸா ண்ட்ராவோ (ரஷ்யா), நஸ்கோவா (செக்குடியரசு)
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?