அமெரிக்க குடியுரிமை ரூ. 9 கோடி: டிரம்ப் விளக்கம்!

அமெரிக்க குடியுரிமை ரூ. 9 கோடி: டிரம்ப் விளக்கம்!


 

அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக டிரம்ப் தங்க அட்டை எனும் புதிய திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.


அமெரிக்காவில் டிரம்ப் தங்க அட்டை (Trump Gold Card - டிரம்ப் கோல்டு கார்டு) மூலம் அமெரிக்காவில் குடியுரிமை பெறலாம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இது கிரீன் கார்டு போலவும், அதனைவிட சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் குடியுரிமை வழங்கும் இந்த டிரம்ப் தங்க அட்டை பெறுவதற்கு ஒரு மில்லியன் டாலர் (ரூ. 9 கோடி) நன்கொடையை அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும்.


விண்ணப்பதாரரின் பின்னணி சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டுமே டிரம்ப் தங்க அட்டையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வழங்கும்.


அதுமட்டுமின்றி, டிரம்ப் கார்ப்பரேட் தங்க அட்டை மூலம் செல்லும் ஓர் ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் (ரூ. 18 கோடி) கட்டணமாகவும், டிரம்ப் கார்ப்பரேட் பிளாட்டினம் அட்டை மூலம் செல்லும் ஓர் ஊழியருக்கு 5 மில்லியன் டாலர் (ரூ. 45 கோடி) கட்டணமாகவும் டிரம்ப் அரசு நிர்ணயித்துள்ளது.


முன்னதாக, அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை குறித்து அதிபர் டிரம்ப் சமீபத்தில் பேசுகையில், ``அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை என்பது இங்குள்ளவர்களுக்கு மட்டுமே. வெளிநாடுகளிலிருந்து வரும் பணக்காரர்களுக்கானது அல்ல. நம் நாட்டில் கால்பதித்து, அவர்களின் முழுக் குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுவது உங்களுக்குத் தெரியும்.


வெளிநாடுகளிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பணக்காரர்களுக்கு அமெரிக்கா தங்குமிடத்தை வழங்காது. அமெரிக்கா, அமெரிக்கர்களின் குழந்தைகளுக்கானது’’ என்று தெரிவித்திருந்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%