அம்மா பாசம்

அம்மா பாசம்


 ரேவதிக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தைதான் ரஞ்சித் .ரேவதிக்கு குழந்தை மீது அதிக பாசம் ,பிரியம் அதனால் யாரையும் நம்பி குழந்தையை விட மாட்டாள். குழந்தைக்கு தேவையான எல்லா வேலைகளையும் தானே செய்வாள் குழந்தையையும் அன்பாக கவனித்துக் கொள்வாள் .சிறிது காலம் சென்றது. ரஞ்சித் பள்ளியில் சேர்ந்தான் அவனுக்கு சாதம் ஊட்டுவதில் இருந்து யூனிபார்ம் ஷூ சாக்ஸ் மாட்டி விடுவதில் இருந்து டிபன் பாக்ஸ் எடுத்துக்கொடுக்கும் வரைதானே செய்வாள் .ஹோம் ஒர்க் பக்கத்திலிருந்து தானே செய்ய வைப்பாள். ரஞ்சித்தும் அம்மா மேல் அதிக பாசமுடன் இருந்தான். அவன் வளர்ந்து பெரியனாகினான். காலேஜ் படிப்பிற்கு செல்ல ரெடி ஆகிவிட்டான் அப்பொழுதும் ரேவதியே எல்லா வேலைகளையும் அவனுக்கு செய்ததால்அவன் மிகவும் சோம்பேறி ஆகிவிட்டான். அம்மா இல்லாமல் ஒரு வேலையும் அவனால் செய்ய முடியாது. அம்மாவையே எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்த பிறகு பெரிய கம்பெனியில் நல்ல வேலையை கிடைத்தது அதிக சம்பளம் கிடைத்தது. குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது அப்பா மட்டும் அடிக்கடி கோபித்துக் கொள்வார். அவனை தன்னுடைய வேலையை செய்ய விடு, நீயே எவ்வளவு நாள்தான் செய்து கொண்டே இருப்பாய் என்று கடிந்து கொள்வார் .ஆனாலும் ரேவதி அதை காதில் வாங்கவில்லை .

ரஞ்சித் தன்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் நட்புடன் பழகினான் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது . அம்மாவின் அனுமதியோடு தன் ஆசையை சொல்லலாம் என்று எண்ணினான் தன் அம்மாவிடம் அந்தப் பெண்ணை பற்றி கூறினான். ஆனால் ரேவதியோ அந்தப் பெண் வேறு ஜாதியை சேர்ந்தவள் நமக்கு ஒத்து வராது என்று கூறிவிட்டாள் நான் உனக்கு வேறு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்றாள். ரஞ்சித்திற்கு அம்மாவின் வார்த்தை முதல் முறையாக வருத்தத்தை தந்தது இரண்டு மூன்று நாள் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தான் .அம்மா ஒரு விஷயம் செய்தால் அது நன்மையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தனக்கு தானே சமாதானப்படுத்திக் கொண்டு பழையபடி அவனோட வேலையை செய்ய தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை நிறுத்திக் கொண்டான் இருந்தாலும் அவன் மனது கேட்கவில்லை அதனால் அவன் மும்பைக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.ஒரு வருடம் சென்றது ரேவதி தனக்கு தெரிந்த குடும்பத்திலிருந்து ராதா என்ற பெண்ணை பார்த்து ரஞ்சித்திற்கு திருமணம் செய்து வைத்தாள் .ரஞ்சித்தும் ராதாவும் மும்பைக்குச் சென்றனர் .ரேவதி தினமும் ரஞ்சித்திடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போனில் பேசிக் கொண்டிருப்பது வழக்கம் அதேபோல் இப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தாள் ரஞ்சித்தும் ராதாவிடம் தன் அம்மாவின் பாசத்தை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பான். அம்மாவின் துதி பாடிக்கொண்டே இருப்பான் அது ராதாவிற்கு மிகவும் சலிப்பை தந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு மாமியார் மீது கசப்பு வர தொடங்கியது .அந்த சமயம் ஊரில் ஒரு உறவுக்காரரின் திருமணத்திற்காக இருவரும் மும்பையில் இருந்து வந்திருந்தார்கள் .ஐந்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது .ரஞ்சித் தன் அம்மாவிடமே அதிக நேரம் செலவழித்தான் இது ராதாவிற்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாமியார் மருமகள் சண்டை வந்தது ராதா கோபித்துக் கொண்டு தன் அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். ரஞ்சித்திற்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அவன் தனியாக மும்பைக்கு சென்று விட்டான் .ஒரு மாதம் ஆகியது ராதா சமாதானமாக மாட்டேன் என்கிறாள் வரவும் இல்லை அவனுக்கு மனதில் போராட்டம் தனிமை மிகவும் அவனை வாட்டியது ரேவதிக்கும் தன் மகன் கஷ்டப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஆறுதல் கூறினால் .இதற்கு என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை .பக்கத்து வீட்டு மங்கலத்திடம் தன் நிலைமையை கூறினால் .அதற்கு மங்கலம் நீ உன் பிள்ளை மீது வைத்த பாசம் தான் காரணம் என்றால் .அம்மா பாசம் இருக்க வேண்டியதுதான் ஆனால் கல்யாணம் ஆன பிறகு உன் கடமை முடிந்தது .அவனை பார்த்துக் கொள்ளவும் அன்பு காட்டவும் ஒருத்தி வந்த பிறகு நீ தூர இருந்து பார்த்து சந்தோஷப்பட வேண்டும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ விட வேண்டும் என்று கூறி னாள்.ரேவதிக்கு விடை கிடைத்தது .அவளே கோபித்துக் கொண்டு சென்ற மருமகளை பார்த்து அவளை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைத்தாள் அடுத்த ஒரு வருடத்தில் குவா. .குவா. ரேவதி தன் பேரக்குழந்தையை பாசத்துடன் வளர்க்க ஆரம்பித்தால் பாட்டியின் பாசம் தொடர்கிறது.



எம். எல்.பிரபா

ஆதம்பாக்கம்

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%