அரசு அலுவலகம் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.o இன் கீழ் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கழிவு சேகரிப்பினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.o இன் கீழ் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கழிவு சேகரிப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று (19.09.2025) காலை 8.30 மணிக்கு கழிவு சேகரிப்பு இயக்கம் 2.o இன் கீழ் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கழிவு சேகரிப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தூய்மை மிஷன், தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு சார்பு அலுவலங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுலகங்கள் ஆகியவற்றில் கழிவு சேகரிப்பு இயக்கம் மூலம் பயன்பாடற்ற கழிவு பொருட்களை சேகரித்து கழிவு சேகரிப்பாளரிடம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஜுன் 5, 2025 அன்று முதற்கட்டமாக கழிவு சேகரிப்பு இயக்கம் 1.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தூய்மை இயக்கம் 2.0, Collection Drive 2.0 மாவட்ட ஆட்சியரகம் முதல் சார்நிலை அலுவலகங்கள் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தூய்மைப்பணி நடைபெற்றது. இன்றைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட அளவிலான அலுவலகங்கள், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 221 கிராம ஊராட்சி அலுவலகங்கள், 6 நகராட்சி அலுவலகங்கள், 17 பேரூராட்சி அலுவலகங்கள், 30 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் 11 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்றது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு அலுவலகங்களிலுள்ள பயன்பாடற்ற கழிவு பொருட்களை சேகரித்து, கழிவு சேகரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சார்நிலை அலுவலகங்களில், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ராஜா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பழனி நாடார் அவர்கள், தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.இரா.தண்டபாணி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி வைஷாலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஏ.எடிசன், உதவி திட்ட அலுவலர் திருமதி. உதயா ரோகினி (Infra – II) , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (SBM) , மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தூய்மை உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்..
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டம்.