அரசு கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


26, செப்டம்பர், அறந்தாங்கி. 


ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் ஒருபகுதியாக " வளமான பெண்கள் நலமான தமிழகம்" எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. 


கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மணமேல்குடி காசநோய் ஒழிப்புத்திட்ட முதுநிலை அறுவை சிகிச்சையாளர் பொன்.மாணிக்கம், அறந்தாங்கி சுகாதார மேற்பார்வையாளர் திருமதி கற்பகாதேவி ஆகியோர் பங்கேற்று, காசநோய் குறித்த விழிப்புணர்வையும், காசநோயாளிகளின் நண்பனாக மாறும் இணையவழிப்பயியிற்சியையும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.


நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%